இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பத்தாக அதிகரிப்பு

மே 25, 2020

குவைத் நாட்டிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பெண் ஒருவர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து  இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பத்தாக அதிகரித்துள்ளது.

51 வயாதான குறித்த பெண் நாடு திரும்பிய நிலையில் அவர் திருகோணமலையிலுள்ள  தனிமைப்படுத்தும் நிலையத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை கொரோனா தொற்றாலர்களின் மொத்த எண்ணிக்கை 1,162. ஆக பதிவாகியுள்ளது.