இராணுவத்தினரால் டெங்கு நோய் பரவலை தடுக்கும் வகையில் நகர் புரங்கள் சுத்திகரிப்பு

மே 26, 2020

இலங்கை இராணுவத்தினர் கிளிநொச்சி பகுதியில் அண்மையில் (மே 22) டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் சுத்திகரிப்பு பணிகளை முன்னெடுத்துள்ளனர்.

சீரற்ற வானிலை காரணமாக கடந்த சில வாரங்களாக நாட்டின் பல பாகங்களிலும் பலத்த மழை பெய்தமையினால் டெங்கு பரவும் நிலை காணப்படுவதை அடுத்து குறித்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றன.  

கரச்சி சுகாதார பணியக அதிகாரிகளினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க 7வது இலங்கை இலகு காலாட்படை பிரிவின் இராணுவ வீரர்கள் குறித்த சிரமதான பணியினை முன்னெடுத்துள்ளனர்.

57 பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் பிரதீப் டி சில்வா அவர்களின் மேற்பார்வையின் கீழ் இச் சிரமதான பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.