வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 24 பேர் இன்று பதிவாகியுள்ளனர்.

மே 26, 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 24 பேர் இன்று (மே 26) அடையாளம் காணப்பட்டதை அடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,206 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக பதிவாகியவர்கள் குவைத் நாட்டிலிருந்து  நாடு திரும்பியவர்கள் எனவும் அவர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.