வள்ளிபுரம் பொலிஸ் வீதித்தடைக்கு அருகில் வெடிப்புச் சம்பவம்

மே 27, 2020
  •  சட்டவிரோத மணல் அகழ்வினை தடுக்கவே பொலிஸ் வீதித் தடை ஸ்தாபிப்பு

யாழ் வல்லிபுரம் பகுதியிலுள்ள பொலிஸாரின் வீதித்தடைக்கு அருகில் வெடிப்பு சம்பவம் ஒன்று, இன்று காலை 7.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த வெடிப்புச் சம்பவத்தில் பொலிஸ் உதவி பரிசோதகர் மற்றும் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஆகிய இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகினர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ள பருத்தித்துறை பொலிஸார், இரு பொலிஸ் வீரர்களும் வீதிக் தடைக்கு அருகில் நடந்து கொண்டிருந்தபோது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஒரு பியர் கேன் வெடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் போக்குவரத்தை தடுக்கும் நோக்கிலேயே குறித்த பொலீஸ் வீதித் தடை அமைக்கப்பட்டிருந்தது.

காயமுற்ற இரு போலீஸ் வீரர்களும் மாந்திகை தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வெடிப்பு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை பருத்தித்துறை பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.