கட்டாரிலிருந்து 272 இலங்கையர்கள் தாயகம் வருகை

மே 27, 2020

டோஹா, கட்டாரில் இருந்து நான்கு குழந்தைகள் உட்பட 272 இலங்கையர்கள் இன்றைய தினம் (மே, 27) நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான UL 218 விமானத்தின் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் ஜனித் விதானபத்திரன தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த இவர்கள், 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்காக தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் முன்னர் விமான நிலையத்தின் அதிகாரிகளினால் கிருமி தொற்று நீக்கம் நடவடிக்கைகளுக்கு உட்படுத்த பட்டதாக பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு அவர் தெரிவித்தார்.