ஊரடங்கு சட்ட விதிகளை மீறிய 64,341 பேர் கைது

மே 27, 2020

இதுவரை ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறியதன் பேரில் 64,341 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 18,695 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளார்.

இன்று அதிகாலை 4.00 மணியுடன் முடிவடையும் ஊரடங்கு சட்டத்தின் போது 411 பேர் செய்யப்பட்டுள்ளதுடன் 81 வாகனங்களும் ஊரடங்கு சட்ட விதிகளை மீறியதன் பேரில் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை,  ஊரடங்கு சட்ட விதிகளை மீறியதன் பேரில் இதுவரை 21,225 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.