பாதுகாப்பு செயலாளர் தேசிய பாதுகாப்பு கல்லூரிக்கு விஜயம்

மே 27, 2020

பாதுகாப்பு அமைச்சின் முழு ஒத்துழைப்புடன் நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்ட தேசிய பாதுகாப்பு கல்லூரியை பார்வையிடும் நோக்கில் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்தன இன்று (மே 27) விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

யூனியன் பிளேஸின் விசும்பாயவில் அமைந்துள்ள முன்மொழியப்பட்டு  நிர்மாணிக்கப்படும் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் நிர்மாணப்பணிகளை பார்வையிடுவதற்காக தனது முதல் வியஜத்தை மேற்கொண்ட பாதுகாப்பு செயலாளர், கல்லூரியின் கொமடான் மேஜர் ஜெனரல் (ஒய்வு ) அமல் கருனாசேகர, முப்படை தளபதிகள், மற்றும் முப்படைகள்  பயிற்சிகள் பணியகங்களின் தலைமைகள் ஆகியோருடன் தேசிய பாதகாப்பு கல்லூரியின் நிர்மாண செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடினார்.

காலனித்துவ முறையில் அமைக்கப்பட்டிருக்கும் தொல்பொருள் மதிப்புடன் கூடிய குறித்த   பங்களாவை  பாதுகாப்பு அமைச்சின் ஒரு வளமாக பயன்படுத்தி தேசிய பாதுகாப்பு கல்லூரியாக மாற்றப்பட உள்ளதுடன், இம்மாளிகையின் திட்டத்தினை மீளாய்வு செய்த மேஜர் ஜெனரல் குணரத்ன  அதன் தற்போதைய நிலைமைக்கு எவ்வித பாதிப்பும் விளைவிக்காமல் கிடைக்கக்கூடிய வளங்களைப் பயன்படுத்தி பணிகளை விரைவுபடுத்துமாறு இங்கு விஜயம் மேற்கொண்டிருந்த அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.