'சந்த ஹிரு சேய' தூபத்திற்கான முதற்கல் சுபவேளையில் வைப்பு

மே 27, 2020

அனுராதபுரத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 'சந்த ஹிரு சேய' தூபத்தின் நாற்சதுர நிர்மாணிப்புக்கான முதற்கல் சுபவேளையில் வைக்கப்பட்டது. கடந்த திங்கள் அன்று இடம்பெற்ற நிகழ்வில் மகா சங்கத்தினரின் ஆசீர்வாதம் மற்றும் பிரித் பாராயணத்தின் பின்னர் தாது கோபுரத்தின் நட்சத்திர நிர்மாணிப்புக்கான முதற்கல் வைக்கப்பட்டது.

இந்த தாது கோபுரத்தின் நிர்மாணப்பணிகள் விரைவில் நிறைவு பெற இருக்கும் தருணத்தில் தூபியன் நாற்சதுர நிர்மாணிப்புக்கான முதல் கல்லானது, பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவின் சார்பில் வன்னி பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக ஜயசிங்கவினால் வைக்கப்பட்டது.
ஜனாதிபதியினால் பல வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் மூன்றாவது பெரிய தாதுகோபுரமான சந்த ஹிரு சேய' தூபி, யுத்தத்தின் போது உயிரிழந்த படை வீரர்களின் ஞாபகமாக அனுராதபுர புனித பூமியில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

முப்படையினரின் தொழில்நுட்ப ரீதியாக திறன்வாய்ந்த ஆளணியனரை கொண்டு நிர்மாணிக்கப்பட்ட தூபத்தின் இறுதிக்கட்ட வேலைகள் சிவில் பாதுகாப்புப் படை வீரர்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிகழ்வில் 21வது பிரிவின் பொது கட்டளைத் தளபதி, 212வது பிரிகேட்டின் கட்டளைத் தளபதி, 9வது மற்றும் 2வது பொறியியலாளர் சேவைகள் படையணியின் கட்டளை அதிகாரிகள், 5வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.