மேல் மாகாணத்தில் சிவில் பாதுகாப்பு படையினரால் தொற்று நீக்கும் செயற்பாடுகள் முன்னெடுப்பு
மே 27, 2020சுவர்ணவாஹினி தொலைக்காட்சி சேவையின் சமூக நலன்புரி நடவடிக்கைகளில் ஒன்றான 'சுவர்ண சத்கார' நிகழ்வின் ஒரு பகுதியாக நாட்டின் மேல் மாகாணத்தில் உள்ள முக்கிய நகரங்களில் கிருமி தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் சிவில் பாதுகாப்பு படையினர் முன்னெடுக்கப்பட்டது.
சிவில் பாதுகாப்புப் படை பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் (ஓய்வு) ஆனந்தா பீரிஸின் பணிப்புரையின் கீழ் இந்த கூட்டு நடவடிக்கையின் முதற்கட்டமாக பம்பலப்பிட்டிய புகையிரத நிலையம் மற்றும் யூனியன் பிளேஸில் உள்ள அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றில் முன்னெடுக்கப்பட்டது.