இடுகம கொவிட் – 19 நிதியத்திற்காக 61000 ரூபா அன்பளிப்பு

மே 27, 2020

கிழக்கு மாகான பிரிவென கல்விக்கான உதவி ஒருங்கிணைப்பு பணிப்பாளர் வணக்கத்திற்குரியது கிரிண்டிவேல ஸ்ரீ சோமரத்ன தேரரினால்  இடுகம கொவிட் – 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்காக   61000  ரூபா அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.  

குறித்த அன்பளிப்பை பாதுகாப்பு அமைச்சில் வைத்து பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு ) கமல் குணரத்னவிடம் இன்று (மே 27) கையளித்துள்ளார்.

வண.சோமரத்ன தேரரினால் அன்பளிப்பு செய்யப்பட தனது ஒரு மாத சம்பளமான 61000  ரூபாவினை  நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசினால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக பயன்படுத்தப்படும்  என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.    

வண.சோமரத்ன தேரர் அம்பாறை திகாமடுல்ல ஸ்ரீ வித்யானந்த பிரிவெனவின் பிரதம விகாராதிபதியும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அதிகரண சங்கனாயகராகவும் செயற்பட்டுவருகிறார்.