குவைத் நாட்டிலிருந்து நாடு திரும்பிய 97 பேருக்கு கொரோனா

மே 28, 2020

நேற்றைய தினம் 150 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் 97 பேர் குவைத் நாட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

ஏனைய 53 பேரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள கடற்படையினர் என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில்  நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,469 ஆக அதிகரித்துள்ளது.