ஊரடங்கு சட்ட விதிகளை மீறிய 66,519 பேர் கைது

மே 28, 2020


மார்ச் 20ஆம் திகதி முதல் இன்று (மே 28) அதிகாலை 4.00 மணியுடன் முடிவடையும் காலப்பகுதிக்குள் ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறியதன் பேரில் 66,519 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 18,733 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை,  கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் ஊரடங்கு சட்ட விதிகளை மீறியதன் பேரில் 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 81 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.