ஊரடங்கு சட்ட விதிகளை மீறியோர் 66,000 க்கும் மேலாக அதிகரிப்பு

மே 28, 2020

மார்ச் 20ஆம் திகதி முதல் இதுவரை ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறியதன் பேரில் 66,519 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 18,733 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அத்தியட்சகர் சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார்.

இன்று (மே 28) அதிகாலை 4.00 மணியுடன் நிறைவு பெற்ற கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் ஊரடங்கு சட்டத்தின் போது 178 பேர் செய்யப்பட்டுள்ளதுடன் 38 வாகனங்களும் ஊரடங்கு சட்ட விதிகளை மீறியதன் பேரில் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை,  ஊரடங்கு சட்ட விதிகளை மீறியதன் பேரில் இதுவரை 21,787 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.