சீஷெல்ஸிலிலுள்ள இலங்கையர்களை அழைத்துவர அரசு நடவடிக்கை
மே 28, 2020சீஷெல்ஸ் நாட்டில் வசிக்கும் மற்றும் பணியாற்றும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஒழுங்குகளை இலங்கை வெளிவிவகார அமைச்சு மேற்கொண்டு வருவதாகவும், அவ்வாறு நாட்டுக்கு வர இருப்பவர்கள் நாட்டில் தற்போதுள்ள விதிமுறைகள் மற்றும் தனிமைப்படுத்தல் வசதிகளுக்கு தமது உடன்பாட்டை தெரிவித்து பதிவுகளை மேற்கொண்டுள் வருகின்றது.
இலங்கைச் சமூக உறுப்பினர்களுடன் சீஷெல்ஸிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் தொடர்ச்சியாக தொடர்புகளைப் பேணி வருவதுடன், உதவிகள் தேவைப்படும் இலங்கையர்களுக்கு ஆதரவுகளை வழங்குவதற்காக, இலங்கையின் சங்கம், சீஷெல்ஸ் பௌத்த சங்கம் மற்றும் லக்ஸ்டார் கிரிக்கெட் கிளப் ஆகியவற்றை உள்ளடக்கிய உயர் ஸ்தானிகராலயத்தின் தலைமையிலான இணைந்த குழுவை நியமிப்பதற்கான முன்முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது. இலங்கைச் சமூகத்தினரின் வேண்டுகோளின் பேரில், அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை விநியோகித்துள்ள உயர் ஸ்தானிகராலயம், இலங்கையர்கள் தொடர்ச்சியாக உயர் ஸ்தானிகராலயத்தைத் தொடர்பு கொள்ளக்கூடிய வகையில் 24 மணிநேர தொலைபேசி அழைப்புச் சேவையையும் நிறுவியுள்ளது.
தொழில் வாய்ப்புக்களை இழத்தல், தொழில் வாய்ப்பு ஒப்பந்தங்கள் நிறுத்தப்படுதல் மற்றும் அவசர மருத்துவ சிகிச்சைக்கான தேவை ஆகியவற்றின் காரணமாக, ஏற்கனவே விமான டிக்கெட்டுக்களை கொள்வனவு செய்துள்ள, இலங்கைக்கு நாடு திரும்புவதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் உயர் ஸ்தானிகராலயத்தில் தம்மைப் பதிவுசெய்த பல இலங்கையர்களுடன் இந்த உயர் ஸ்தானிகராலயம் தொடர்ந்தும் தொடர்புகளைப் பேணி வருகின்றது. தற்போது பலர் சீஷெல்ஸிலுள்ள ஐந்து தீவுகளில் பரவிக் காணப்படுகின்றனர்.
சீஷெல்ஸில் 2020 மே 11 ஆந் திகதி வரை கோவிட்-19 தொற்றுக்குள்ளான ஒரேயொரு நோயாளர் மட்டுமே இனங்காணப்பட்டுள்ளதுடன், 2020 ஏப்ரல் 6ஆந் திகதி இனங்காணப்பட்ட கோவிட்-19 தொற்றுக்குள்ளான 11 நபர்களுக்குப் பின்னர் எந்தவொரு தொற்றுக்குள்ளான நபரும் பதிவு செய்யப்படவில்லை.