கபூர் கட்டடத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான கடற்படை வீரர்
மே 28, 2020கொழும்பு கோட்டை சேர் பரோன் ஜயதிலக மாவத்தையில் உள்ள கபூர் கட்டடத்தில் தங்கவைக்கப்பட்ட கடற்படை வீரர் அண்மையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான விடம் தொடர்பாக அடிப்படையற்ற தகவல்களை பரப்புவதை இலங்கை கடற்படை மறுப்பதுடன், அக்கட்டடத்தில் தங்கியிருந்த குறித்த வீரர் வெலிசர கடற்படை முகாமுக்கு சொந்தமான கடற்படை நோயார் காவு வண்டி சாரதியாக கடமையற்றுவர் எனவும் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் மற்றும் கடற்படையின் வைரஸ் தொற்றுக்குள்ளான பிரிவினரிடம் இருந்து அவர்களை பிரித்து வைத்திருப்பது தற்போதைய காலத்தின் தேவை என்பதால் குறித்த கட்டடத்தில் வெலிசர கடற்படை வைத்தியசாலையில் பணிபுரியும் நோயார் காவு வண்டி சாரதிகள் மற்றும் சில தொழிநுட்ப பணியாளர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர், லெப்டினன்ட் கமாண்டர் இசுறு சூரிய பண்டார தெரிவித்தார்.
கடற்படையைச் சேர்ந்த குறித்த நோயார் காவு வண்டி சாரதிக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை, அடையாளப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து குறித்த கட்டடத்தில் தங்கியிருந்த அவருடன் தொடர்புடைய கடற்படையைச் சேர்ந்த அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.