பாணந்துறை தள வைத்தியசாலையில் இலங்கை விமானப் படையினால் புதிய பதிவிடல் (ட்ரைஏஜ் ) நிலையம் நிர்மாணிப்பு

மே 28, 2020

பாணந்துறை தள வைத்தியசாலையில் இலங்கை விமானப் படையினால் புதிய பதிவிடல் (ட்ரைஏஜ் ) நிலையம் நிர்மாணிப்பு  
பாணந்துறை தள வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சி வழங்கும் வகையில் இலங்கை விமானப் படையினால் நிர்மாணிக்கப்பட்ட  “ட்ரைஏஜ் சென்டர்”  எனும்  புதிய பதிவிடல் நிலையம் ஒன்று இன்று (மே 28)  திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிலையத்தின் நிர்மாணப்பணிகளுக்கு எசுபொலி பெமிலி மற்றும் ஹேமாஸ் ஹோல்டிங் தனியார் நிறுவனங்கள் நிதியுதவி வழங்கியுள்ளன.

நோயாளர்களின் தீவிரத்தன்மை அல்லது சிகிச்சையளிக்கப்பட்டு அல்லது சிகிச்சையின்றி  குணமடையும் நோயாளிகளுக்கு முன்னுரிமையளிப்பதை தீர்மானிக்கும் செயல்முறையே “ட்ரைஏஜ்” சென்டர் ஆகும்.

இச் செயல்முறை மூலம் நோயாளிகளுக்கு தேவையான அவசர சிகிச்சை, அவசர போக்குவரத்து அல்லது மருத்துவ பராமரிப்பு ஆகியவற்றை தீர்மானிக்க உதவுகிறது.

குறித்த நிலையத்தின் திறப்பு விழா நிகழ்வில்,  ஹேமாஸ் ஹொஸ்பிடல் தனியார் நிறுவனம் மற்றும் ஹேமாஸ்  மருந்துகள் தனியார் நிறுவனத்தின் தலைவர் மற்றும் முன்னாள் இலங்கை கிரிக்கெட் கேப்டன் குமார சங்கக்கார ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

கொவிட்-19 கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக விமானப்படையின் மனிதாபிமான உதவிகளை வழங்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட குறித்த நிர்மாணப்பணிகள் விமானப்படை தளபதி எயார் மாஷல் சுமங்கள் டயஸ் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய இம்மாதம் 13ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.