மீனவ சமூகம் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை

மே 29, 2020

இன்று (மே 29) கலை 05.30 மணியளவில்  வெளியிடப்பட்டுள்ள கப்பல் வானிலை முன்னறிவிப்புக்கமைய  புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளிலும் காலியிலிருந்து தென்பகுதி ஊடாக மட்டக்களப்பு வரையான  கடற்பரப்புகள் சற்று கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன்,  காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70 -80 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனவும்  எதிர்பார்ப்பதால் கடற்படை மற்றும் மீனவ சமூகம் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இறக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.  

மன்னாரிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2 – 2.5 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 இக் கடற்பரப்புகளில் சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.