கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 775 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்

மே 29, 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 775 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருவதுடன், இவர்களில் 68 பேர் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.  

மேலும் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்த 745 பேர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக அண்மைய (மே 29 )தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 61பேர் இனங்காணப்பட்டதை அடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1530 ஆக அதிகரித்துள்ளது.