கடற்படையினால் பொத்துவில் முஹுது மஹா விகாரையில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

மே 29, 2020

இலங்கை கடற்படை பொத்துவில் பகுதியில் உள்ள  புராதன முஹுது மஹா விகாரையில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை நேற்று (மே 28) நிறுவியுள்ளது.

இப்பகுதியில் நிலவிய நீண்ட நாள் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் சுகாதார அமைச்சின் அனுசரணையில் நிறுவப்பட்ட இப்புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அப்பிராந்தியத்தில் வசிக்கும் சமூககங்களின் குடிநீர் பாவனைகளுக்காக தென்கிழக்கு கடற்படை கட்டளைத்தளபதியினால் திறந்து வைக்கப்பட்டது.

புதிதாக நிறுவப்பட்ட இக்குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை  வண. மஹா சங்க நாயக்கரின் ஆசீர்வாதத்துடன் தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் எட்மிரல் செனரத் விஜேசூரிய திறந்து வைத்தார். இதன்மூலம் இப்பிராந்தியத்தில் வசிக்கும் மக்களின்  குடிநீர் தேவையை நிறைவு செய்வதுடன்,  நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், பக்தர்கள், இப்புனித வழிபாட்டுத் தலத்தை வழிபட வருபவர்களின்  குடிநீர் தேவையையும் நிறைவு செய்ய முடியுமென தெரிவிக்கப்படுகிறது.  

இக்குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை திறந்து வைக்கும் நிகழ்வில், முஹுது மஹா விகாரையின்  பிரதம விகாராதிபதி, பொத்துவில் பிரதேச செயலாளர், கடற்படை அதிகாரிகள், பிரதேச வாசிகள், மற்றும் பக்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.