நுவரெலியா மாவட்டத்தில் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் ஊரடங்குச் சட்டம் அமுல்

மே 29, 2020
நுவரெலியா மாவட்டத்தில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு தினங்களில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு சற்றுமுன்னர் தெரிவித்துள்ளது. 
 
இதற்கேற்ப, நுவரெலியா மாவட்டத்தில் நாளை சனிக்கிழமை 24 மணி நேர ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
 
எனினும் ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்ட அமுலில் மாற்றங்கள் கொண்டுவரப்படவில்லை எனவும் எனினும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டவாறு எதிர்வரும் 31ம் திகதி நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.