கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,558 அதிகரிப்பு ; 754 நோயாளிகள் குணமடைவு

மே 30, 2020

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,558 அதிகரித்துள்ள அதேவேளை, தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த 754 பேர் சிகிச்கையின் பின் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.    

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 794 பேர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.    

நேற்றைய தினம் மேலும் 28 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாகவும் அவர்களின் 17 பேர் கடற்படை வீரர்கள் எனவும் எஞ்சியோர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.