இரு அரசு இணையதளங்கள் இணைய தாக்குதலுக்கு இலக்கு

மே 30, 2020

இரண்டு அரசாங்க இணையதளங்கள் இணைய தாக்குதலுக்கு இன்று அதிகாலை (மே,30) இலக்காகியுள்ளன.    

பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றின் உத்தியோக பூர்வ இணையத்தளங்கள் இணைய தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதை இலங்கை விமானப்படையின் இணைய பாதுகாப்பு மையம் உறுதிப்படுத்தியது.    

இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு ஒருங்கிணைப்பு மையம் (SLCERT) மேற்கொண்டு வருகிறது.