இரு பிலிப்பைன்ஸ் கடற்படைக் கப்பல்கள் தாயகம் நோக்கி பயணம்

மே 30, 2020

கொழும்பு துறைமுகத்திற்கு வந்த இரண்டு பிலிப்பைன்ஸ் கடற்படைக் கப்பல்கள் இலங்கையில் தங்கியிருந்த பிலிப்பைன்ஸ் நாட்டு பிரஜைகளுடன் தாயகம் நோக்கி புறப்பட உள்ளன.   

வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த பிலிப்பைன்ஸ் நாட்டு பிரஜைகள் சுகாதார வழிமுறைகளுக்கு அமைய நாடு திரும்புவதற்கு இலங்கை கடற்படையினரால் உதவியளிக்கப்பட்டது. வருகை தந்த இரண்டு கடற்படை கப்பல்களின் லொஜிஸ்டிக்ஸ் தேவைகள் துறைமுகத்தில் கப்பல் குழுவினரை இறக்கமால் வழங்கப்பட்டன.  

நாடு திரும்பியவர்களில் இலங்கையில் பணிபுரிந்தவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.