பெலாரஸ் நாட்டிலிருந்து 275 இலங்கையர்கள் தாயகம் வருகை

மே 30, 2020

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பெலாரஸ் நாட்டில் நிர்கதிக்குள்ளான 275 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான UL 1206 விமானத்தின் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த இவர்கள் முதற்கட்ட மருத்துவ பரிசோதனைக்குப் பின் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.