மொரட்டுவ பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்திய துப்பாக்கிதாரிகளை தேடும் பணிகள் ஆரம்பம்

மே 30, 2020

கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சொய்சபுற பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் நேற்று (மே,29) அதிகாலை 12:30 மணியளவில் காரில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற வேளையில் குறித்த பகுதியில் கடமையிலிருந்த பொலிஸ் சார்ஜென் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் ஆகியோர் இந்த சம்பவம் தொடர்பாக நேற்று முதல் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டதாக ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

முந்தைய சந்தர்ப்பத்தில் அடையாளம் தெரியாத குழுவினரால் அதே சொத்து சேதமடைந்தது என்று குறிப்பிட்டுள்ள அவர், இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.