முல்லைத்தீவு படையினரால் 'துரு-மிதுரு-நவ ரடக்' திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடுகை

மே 30, 2020

அரசாங்கத்தின் ‘துரு-மிதுரு-நவ ரடக்’ திட்டத்துடன் இணைந்தாக வற்றப்பலை கண்ணகி அம்மன் இந்து ஆலய வளாகத்தில் மரம் நடுகை செய்யும் நிகழ்வு இலங்கை இராணுவத்தின் 59-வது பிரிவின் படைவீரர்களினால் முன்னெடுக்கப்பட்டது.

ஆலய வளாகத்தில் மரம் நடுகை செய்வதற்கான நிலப்பண்படுத்தல் செயற்பாடு இலங்கை இராணுவத்தின் 12வது இலேசாயுத படையணி மற்றும் 24வது சிங்க படையணி ஆகியவற்றின் படைவீரர்களால் முன்னெடுக்கப்பட்டதுடன் குறித்த பிரதேசத்தில் ஒவ்வொன்றும் சுமார் 7 அடி நீளமான உயரமான 26 வேப்ப மரங்கள் நடுகை செய்யப்பட்டன.  

இந்த நிகழ்வில் 59வது பிரிவின் பொது கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, கண்ணகி அம்மன் ஆலயத்தின் பிரதம குருக்கள், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் உறுப்பினர்கள், அவலோன் ஹோட்டல் மற்றும் ஸ்பாவின் பணிப்பாளர், ஆலய நிர்வாக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.