ஐக்கிய இராச்சியத்தில் இருந்து மேலும் மூன்று இலங்கையர்கள் தாயகம் வருகை

மே 31, 2020

ஐக்கிய இராச்சியத்தில் தங்கியிருந்த மேலும் மூன்று இலங்கையர்கள் நேற்று இரவு நாடுதிரும்பியுள்ளனர்.  

இவர்கள், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான UL 504 விமானத்தின் மூலம் லண்டனிலிருந்து கொழும்புக்கு அழைத்து வரப்பட்டனர்.  

விமான நிலையத்திற்கு வருகை தந்த இவர்களுக்கு முதற்கட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் ராஜகிரிய ஆயுர்வேத வைத்தியசாலையில் இலங்கை இராணுவத்தினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.