கொரோனவைரஸ் தொற்றிலிருந்து 388 கடற்படை வீரர்கள் குணமடைவு

மே 31, 2020

கொரோனவைரஸ் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் சில கடற்படை வீரர்கள் குணமடைந்து வெளியேறியதை அடுத்து சிகிச்சையின் பின் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய கடற்படை வீரர்களின் எண்ணிக்கை 388 ஆக அதிகரித்துள்ளது.  

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 25 கடற்படை வீரர்கள் வைரஸ் தொற்றுக்குள்ளானமை திப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய கடற்படை வீரர்களின் எண்ணிக்கை 750 ஆக அதிகரித்துள்ளது.  

மேலும், 362 கடற்படை வீரர்கள் வைரஸ் தொற்று காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.