குவைத்திலிருந்து நாடு திரும்பியவர்களுக்கு உதவிய இராணுவ வீரருக்கு வைரஸ் தொற்று உறுதி

மே 31, 2020

குவைத்திலிருந்து நாடு திரும்பியவர்களுக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்  உதவியாளராக செயற்பட்ட இராணுவ வீரர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியமை நோற்றய தினம் (மே, 30) உறுதிபடுத்தப்பட்டது.   

பாதிக்கப்பட்ட இராணுவ வீரர், குவைத்திலிருந்து நாடு திரும்பி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த இலங்கையர்களுக்கு உதவியாளராக செயற்பட்டிருந்தார்.

நேற்றைய தினம் குவைத்தில் இருந்து வருகைதந்தவர்களில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்கள் என அடையாளப்படுத்தப் பட்டவர்களில் இராணுவ வீரர் ஒருவரும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவேவ விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.