பாணந்துறை துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் விசேட அதிரடிப்படையினரால் கைது

மே 31, 2020

கல்கிசை சொய்சபுற பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் நேற்று மாலை (மே, 30) கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலியா சேனாரத்ன தெரிவித்துள்ளார்.  

பானந்துரை பகுதியில் தலைமறைவாக இருந்த குறித்த சந்தேக நபர், உணவகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதன் பேரிலும், பிறிதொரு சம்பவத்தில் அதே இடத்தை தாக்கியதன் பேரிலும் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு அவர் தெரிவித்தார்.  

சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கல்கிசை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.