கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரிப்பு

ஜூன் 01, 2020

45 வயது மதிக்கத்தக்க ஒருவர் வைரஸ் தொற்று காரணமாக மரணமடைந்ததை அடுத்து இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது.

குவைத்தில் இருந்து வருகைதந்த இவர் வைரஸ் தொற்று காரணமாக ஹோமாகம தள வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அணில் ஜாசிங்க தெரிவித்தார்

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 13 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் வைரஸ் தொற்றுக்குள்ளான உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,633 ஆக உயர்வடைந்துள்ளது. அத்துடன் தொற்றுக்குள்ளான 801 பேர் சிகிச்சையின் பின் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.