தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி செய்த மேலும் 58 பேர் வீடுகளுக்கு

ஜூன் 01, 2020

தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி செய்த மேலும் 58 பேர் இன்றைய தினம் (ஜூன், 01) வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

இவர்கள், முப்படையினரால் நிர்வகிக்கப்படும் கண்ணொருவ, குண்டசாலை மற்றும் பூச ஆகிய தனிமைப்படுத்தல் மையங்களில் மூன்று வார கால தனிமைப்படுத்தப்படுதல் காலத்தை பூர்த்தி செய்தவர்கள் என கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்து இதுவரை சுமார் 11,488 பேர் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் படையினரால் நிர்வகிக்கப்படும் 46 தனிமைப்படுத்தல் மையங்களில் தற்போது 5,108 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.