மொனராகல துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

ஜூன் 01, 2020

மொனராகல, மரவா பிரதேசத்தில் வசிக்கும் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர், நேற்று (மே, 31) இரவு 9.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த பிரதேசத்தில் வசிக்கும் பிரதேசவாசியிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய பொலிஸ் அவசர சேவை (119) , இந்த சம்பவம் தொடர்பாக மொனராகல பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியதையடுத்து குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குடும்ப பிரச்சினை காரணமாக இடம்பெற்றதாக பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தேக நபரை கைது செய்வதற்காக மொனராகல பொலிஸ் நிலையத்தினால் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.