இந்திய கடற்படைக் கப்பலின் உதவியுடன் 700 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

ஜூன் 01, 2020
நாடு திரும்ப முடியாமல் இலங்கையில் தரித்திருந்த 700 இந்தியர்கள் இந்திய கடற்படை கப்பல் ‘ஐ.என்.எஸ் ஜலாஷ்வா’ வின் உதவியுடன் இன்றைய தினம் (ஜூன் 1) நாடு திரும்பினர்.
 
இந்தியர்களை நாட்டு திருப்பி அழைப்பதை நோக்கமாகக் கொண்ட வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சேது சமுத்திர நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்திய கடற்படைக் கப்பல் ‘ஐ.என்.எஸ் ஜலாஷ்வா’ கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்தது.
 
இந்த கப்பலில் பயணிக்கும் பயணிகள் தமிழ்நாட்டின் தூத்துக்குடி துறைமுகத்தில் தரையிரக்கப்படுவார்கள் என
எதிர்பார்க்கப்படுகிறது.