சிலாவத்துரையில் துப்பாக்கியுடன் பெண் ஒருவர் கடற்படையினரால் கைது

ஜூன் 01, 2020
சிலாவத்துரை மரிச்சுகட்டி பகுதியில் நடத்தப்பட்ட கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, 12 மில்லி மீட்டர் குறுந்தூர துப்பாக்கி ஒன்றினை வைத்திருந்த 34 வயது பெண் ஒருவர் சந்தேகத்தின் பேரில் இலங்கை கடற்படையினரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார். 
 
சிலாவத்துறை பொலிஸாருடன் இணைந்து கடற்படையினரால் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகநபர் குறித்த சந்தேக நபர் வசித்துவந்த வீடு ஒன்றிலிருந்து இந்த குறுந்தூர துப்பாக்கி மீட்கப்பட்டது.
 
இந்த சம்பவம் தொடர்பாக சிலாவத்துறை பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.