44 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 5,038 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளில்

ஜூன் 02, 2020

இராணுவத்தினாரால் நடாத்தி செல்லப்படும் சுமார் 44 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தொடர்ந்தும் 5,038 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக  கொவிட்-19 கொரோனா வரைஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய நடவடிக்கைகள் நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நேற்று பல்லேகளை குண்டசாலையின் கண்நோருவ தனிமைப்படுத்தல்  நிலையத்தில் தமது தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த சுமார் 70க்கும் அதிகமானோர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

இதன்பிரகாரம்,  இராணுவத்தினாரால் நடாத்தி செல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து தமது தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவுசெய்த  சுமார் 11,558  பேர் வெளியேறியுள்ளதாக அறிக்கைகளின் பிரகாரம் தெரிவிக்கப்படுகின்றன.