கொரோனா வைரஸிலிருந்து 411 கடற்படை வீரர்கள் குணமடைவு

ஜூன் 02, 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 411 கடற்படை வீரர்கள் குணமடைந்து  வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக (ஜூன் 1 ) இலங்கை கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மொத்த கடற்படை வீரர்களில் எண்ணிக்கை 754 ஆக பதிவாகியுள்ளதுடன், அவர்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான 343 தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கடந்த  24 மணித்தியாலங்களுக்குள் நான்கு  கடற்படை வீரர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.