பஸ் விபத்தில் இரு இராணுவ வீரர்கள் பலி

ஜூன் 02, 2020

இன்று காலை பஸ் வண்டி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டிருந்த இரு இராணுவ வீரர்களும் விபத்துக்குள்ளாகி  பலியாகியுள்ளனர்.

ஹல்தொட மற்றும் லுனுகல பகுதியல் வசிக்கும் இராணுவ வீரர்களான இவர்கள் விடுமுறையில் வீடு சென்றுகொண்டிருந்தபோது, பகமுன தமனாயாய பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.   

27 மற்றும் 28 வயதுடைய இருவரும் பகமுன வைத்தியசாலையில் அனுமத்தவேளையில் உயிரிழந்துள்ளனர்.  

இதேவேளை, பொலிஸார் பஸ் சாரதியை கைதுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.