மாளிகாவத்தை துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்

ஜூன் 02, 2020

மாளிகாவத்தை லக்செத செவென தொடர்மாடி  பகுதியல் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் இன்று (ஜூன், 2) புதுக்கடை நீதவான்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.   

இத்துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேகனபார் நேற்றிரவு (ஜூன், 1) விஷேட அதிரடிப்படையினரினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது கொட்டாஞ்சேனை பகுதியில் வைத்து கைதுசெய்யப்படிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நபர் கைதுசெய்யப்படும்போது அவரிடம் இருந்த கைத் துப்பாக்கி ஒன்றும் விஷேட அதிரடிப்படையினரினால் கைப்பற்றப்பட்டது. கிராண்ட் பாஸ் பகுதியில் வசிக்கும்  31வயதுடைய குறித்த சந்தேக நபரை கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைத்துள்ளனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய இருவரும் வெள்ளம்பிடிய மற்றும் மாளிகாவத்தை பகுதிகளில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.