தெல்தெனிய வைத்தியசாலையின் மூன்று மாடிக் கட்டிடம் கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் படையினரால் மாற்றியமைப்பு
ஜூன் 02, 2020தெல்தெனிய வைத்தியசாலையில் சாதாரன வார்டுகளைக் கொண்ட கட்டிடத் தொகுதி கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் 17வது பொறியியளார்கள் சேவைப் படையணி வீரர்களினால் புணரமைக்கப்பட்டுள்ளது.
பல்லேகலையில் உள்ள 172வது பொறியியளார்கள் சேவை படைப்பிரிவு வீரர்களினால் குறித்த வைத்தியசாலையின் மூன்று மாடிக் கட்டிடம் 111 வது பிரிகேட்டின் மேற்பார்வையின் கீழ் புணரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த வைத்தியசாலை கட்டிடத்தில் 150 நோயாளர்கள் சிகிச்சையளிக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் தீவிர சிகிச்சை பிரிவில் 10 பேருக்கு சிகிச்சையளிக்கும் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
புணரமைக்கப்பட்ட இந்த கட்டிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை 111வது பிரிகேட்டின் கட்டளைத் தளபதி கேர்ணல் கெ.ஏ.டப்.என்.எச் பண்டாரநாயக்கவினால் வைத்தியசாலை நிருவாகத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கபட்டது.