சிங்கப்பூரில் சிக்கித் தவித்த 291 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

ஜூன் 03, 2020

கொரோனா வைரஸ் காரணமாக UL 303 இலக்க இலங்கை எயார்லைன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூரில் இருந்து அழைத்துவரப்பட்ட 291 இலங்கையர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நேற்று மாலை (ஜூன், 2) வந்தடைந்தனர்.

இவ்வாறு வருகைதந்த அனைவரும்  விமானநிலையத்தில் வைத்து கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் ஆலோசனை வழங்கப்பட்டதாக விமானநிலைய கடமை முகாமையாளர்,  சானக விஜேரத்ன பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளார்.