கொரோனா வைரஸிலிருந்து மேலும் பல கடற்படை வீரர்கள் குணமடைவு

ஜூன் 03, 2020

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்த மேலும் 418 கடற்படை வீரர்கள்  வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக (ஜூன் 3) அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

வைரஸ் தொற்றுக்குள்ளான மொத்த கடற்படை வீரர்களில் எண்ணிக்கை 763 ஆக பதிவாகியுள்ளதுடன், கடந்த  24 மணித்தியாலங்களுக்குள் ஏழு கடற்படை வீரர்கள் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை,  வைரஸ் தொற்றுக்குள்ளான 345 கடற்படை வீரர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக கொவிட் – 19 கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான  தேசிய  நடவடிக்கைகள் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.