சிங்கப்பூரிலிருந்து மேலும் ஒரு தொகுதி இலங்கையர்கள் தாயகம் வருகை

ஜூன் 03, 2020

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சிங்கப்பூர் நாட்டில லிருந்து நாடு திரும்ப முடியாத நிலையிலிருந்த 291 இலங்கையர்கள் இன்று காலை தாயகம் திரும்பியுள்ளனர்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான UL 1206 விமானத்தின் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இவர்கள் முதற்கட்ட மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.