11,669 பேர் தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி

ஜூன் 03, 2020

முப்படையினரால்நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து இதுவரை 11,669 பேர் தமது தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி செய்து வெளியேறியுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாடு முழுவதும் படையினரால் நிர்வகிக்கப்படும் 40 தனிமைப்படுத்தல் மையங்களில் 5243 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.