மாளிகாவத்தை துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் மற்றுமொரு சந்தேக நபர் கைது

ஜூன் 03, 2020

மாளிகாவத்தை லக்செத செவென தொடர்மாடி  குடியிருப்பில் கடந்த மாதம் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் இன்று (ஜூன், 03) மாளிகாவத்தை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மாளிகாவத்தை ஜூம்மா மஸ்ஜித் வீதியில் வசிக்கும்  38 வயதுடைய குறித்த சந்தேக நபர் இன்று (ஜூன், 3) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை கைதுசெய்யும் வகையில் மாளிகாவத்தை பொலிஸார் மற்றும்  கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் ஆகியோரினால் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.