சொய்சபுற உணவக துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேக நபர்கள் கைது

ஜூன் 03, 2020

ரத்மலானை மற்றும் அங்குலான பகுதிகளில் தலைமறைவாகியிருந்த சொய்சபுற உணவக துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவரும் கல்கிஸ்சை பொலிஸாரினால் கைது நேற்றைய தினம் செய்யப்பட்டனர்.
 
சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்படும் வேளையில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

26 மற்றும் 36 வயதுகளையுடைய இரு சந்தேக நபர்களும் இன்றைய தினம் நீதிவான் நீதிமன்றத்தில்   முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் கல்கிசை பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.