வைரஸ் தொற்றிலிருந்து 424 கடற்படை வீரர்கள் குணமடைவு

ஜூன் 04, 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் சில கடற்படை வீரர்கள் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர். இதனால் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய கடற்படை வீரர்களின் எண்ணிக்கை 424ஆக உயர்வடைந்துள்ளது என கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சில கடற்படை வீரர்களுக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 763 ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை, 339 கடற்படை வீரர்கள் வைரஸ் தொற்று காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.