'இடுகம' கொவிட் -19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் இருப்பு ரூ. 1,243 மில்லியன்
ஜூன் 04, 2020'இடுகம' கொவிட்-19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் இருப்பு மக்கள், நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்பட்ட நேரடி நன்கொடைகளின் மூலம், ரூ.1,243 மில்லியனைக் கடந்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நன்கொடையாளர்களிடமிருந்து 'இடுகம' இணையத்தளத்தின் ஊடாக வைப்புச் செய்யப்பட்ட1,786,050 ரூபா வைப்புத்தொகை அடங்களாக குறித்த கணக்கில் மொத்தம் ரூ.1,243,656,318.96 வைப்பிலிடப்பட்டுள்ளது.
நன்கொடைகளை, காசோலைகள், தொலை பணபரிமாற்றம் மூலமாகவோ அல்லது www.itukama.lk இணையத்தளத்தினை அணுகி அல்லது # 207 # ஐ டயல் செய்வதன் மூலம் வைப்புச் செய்ய முடியும்.
மேலதிக தகவல்களுக்கு 0760 700 700, 0112 320 880, 0112 354 340 அல்லது 0112 424 012 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்துமாறு ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.