சொய்சாபுர சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்

ஜூன் 04, 2020

கல்கிஸ்ஸை, சொய்சாபுர பிரதேசத்தில் உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டு கல்கிஸ்ஸை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (ஜூன், 04) ஆஜர் படுத்தப்பட்டார்.

குறித்த சந்தேக நபர் ரத்மலானை பிரதேசத்தில் மறைந்திருந்த வேளையில் கல்கிஸ்ஸை பொலிஸாரினால் நேற்ற கைது செய்யப்பட்டார்.

குறித்த சம்பவம் தொட்பாக கல்கிஸ்ஸை பொலிஸாரினால் மேலதிக விசாரனைகள் முன்னெடுப்பட்டு வருகின்றன.