உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மன்னாரில் கடற்படையினரால் மீட்பு

ஜூன் 04, 2020

மன்னார் அச்சனகுள பிரதேசத்தில் புதரினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்நாட்டு தயாரிப்பான நாட்டுத் துப்பாக்கி ஒன்று இலங்கை கடற்படையினரால் நேற்றய தினம் (ஜூன் 3)மீட்கபட்டுள்ளது.

வட மத்திய கடற்படை கட்டளையகத்தினால் முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது மீட்கப்பட்ட இந்த துப்பாக்கி, மேலதிக விசாரணைகளுக்காக முருகன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.